என்னை பத்தி மட்டும் பேசு, என் குடும்பத்தை பத்தி பேசாதே.. விசித்ராவை ஒருமையில் பேசிய ஜோவிகா..!

  • IndiaGlitz, [Friday,October 06 2023]

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஜோவிகா தனது அம்மா வயது இருக்கும் விசித்ராவை பார்த்து ஒருமையில் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐந்து நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து அதிரடியாக நடந்து வருகிறது. போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் மோதி வருகின்றனர் என்பதும் அனைத்து போட்டியாளர்களுமே முந்தைய சீசன்களை பார்த்து தயாராகி வந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அமைதியாக இருந்த வனிதா மகள் ஜோவிகா இன்று திடீரென ஆவேசமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது வாழ்க்கை பற்றி கூறிய போது ’தனக்கு படிப்பு சரியாக வரவில்லை என்றும் அதனால் ஒன்பதாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டதாகவும் கூறியிருந்தார். மேலும் தனது குடும்பம் கலை குடும்பம் என்பதால் நடிப்பில் எனக்கு ஆர்வம் இருந்தது என்றும் நடிப்பு எனக்கு இயல்பாகவே வந்து விட்டது என்று கூறியிருந்தார்.

இது குறித்து பேசிய நடிகை விசித்ரா ’ஒருவர் டாக்டராக இன்ஜினியராக படிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அதே நேரத்தில் அடிப்படைக் கல்வியை படிக்க வேண்டும். குறைந்தது 12ஆம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்று பேசினார்.

இது தன்னை தான் கூறுவதாக நினைத்து கொண்ட ஜோவிகா அவருடன் வாக்குவாதம் செய்தார். அப்போது விசித்ரா உன்னுடைய அம்மா இதைத்தான் சொல்வார், அதனால் தான் நானும் சொல்கிறேன் என்று சொல்ல ’என்னுடைய குடும்ப பிரச்சினை என்ன என்பது உங்களுக்கு தெரியாது, என்னுடைய அம்மா சொன்னால் நான் கேட்டுக் கொள்வேன், இந்த ஷோவிற்கு நான் தான் வந்துள்ளேன், என்னுடைய அம்மா தாத்தா பாட்டி வரவில்லை, அதனால் என்னை பற்றி மட்டும் பேசுவதாக இருந்தால் பேசு, என் பேக்ரவுண்ட் பற்றி பேசாதே’ என எரிச்சலுடன் ஜோவிகா விசித்ராவை பார்த்து ஒருமையில் கூறினார்.

ஜோவிகாவின் கருத்தை சக போட்டியாளர்கள் ஏற்றுக்கொண்டு அவருக்கு ஆதரவாளித்தாலும் அவர் அம்மா வயது உள்ள விசித்ராவை ஒருமையில் பேசியது சரியா? என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

More News

ஆடியோ விழாவுக்கு பதில் 'லியோ'வின் புரமோஷன் விழா.. வெளிநாட்டில் நடத்த திட்டம்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ விழாவை கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை நேரு

ஜெயிலருக்காக ரஜினிக்கு கிடைத்த அதே பிஎம்டபிள்யூ கார்.. காசு கொடுத்து வாங்கி சூரி அசத்தல்..!

'ஜெயிலர்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய பிஎம்டபிள்யூ கார் பரிசளித்தது என்பது தெரிந்ததே.

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரருக்கு ஜாமீன்.. ஆனால் நீதிமன்றம் விதித்த முக்கிய நிபந்தனை..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் பண மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் 90களின் ஹீரோயின்.. யோகி பாபுவுக்கு அம்மா கேரக்டர்..!

கடந்த 90களில் ரசிகர்களின் மனதில் குடியிருந்த நடிகை, நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், அவர் யோகி பாபு அம்மா கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

சிறகடிக்க ஆசை: முத்து குடும்பத்தில் இன்னொரு சிக்கல்..  சுருதியால் மீனாவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறுகிய காலத்திலேயே இந்த சீரியல் டாப் 10  டிஆர்பியில் வந்துவிட்டது