ஜேஎஸ்கே நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு
சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'தரமணி', தேசிய விருது பெற்ற 'குற்றம் கடிதல்' உள்பட பல திரைப்படங்களை தயாரித்துள்ள ஜேஎஸ்கே நிறுவனம் தனது அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் இதர விவரங்களை அறிவித்துள்ளது.
ஜேஎஸ்கே நிறுவனத்தின் அடுத்த படத்தின் டைட்டில் 'ஹவுரா ப்ரிட்ஜ்'. பிரியங்கா உபேந்திரா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை லோஹித் இயக்கவுள்ளார். தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 4ஆம் தேதி தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பிரிட்ஜ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது. ஒரு பெண் ஒரே மகளுடன் தனியாக ஒரு பெரிய நகரில் எப்படி வாழ்க்கையை நடத்துகிறார், அவரை சமூகம் எப்படி பார்க்கின்றது என்பது குறித்த இந்த கதையில் ப்ரியங்கா உபேந்திராவின் மகளாக ஐஸ்வர்யா நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் ஜேஎஸ்கே நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'புரியாத புதிர்' வரும் செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.