ரைசாவை வம்புக்கு இழுக்கும் ஜூலி-காயத்ரி!

  • IndiaGlitz, [Monday,July 31 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களான காயத்ரி மற்றும் ஜூலி ஆகிய இருவருமே மற்ற பங்கேற்பாளர்களை குறிப்பாக ஓவியாவை கட்டம் கட்டி வெளியேற்ற முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் ஓவியா இதற்கெல்லாம் அசருகிற ஆளாய் தெரியவில்லை. அவர் தைரியமுடனும், புன்னகையுடனும் தனக்கு வரும் சோதனைகளை எதிர்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ஓவியாவிடம் இனிமேல் நமது வேலை பலிக்காது என்று முடிவு செய்துவிட்ட ஜூலியும் காயத்ரியும், தற்போது இதுவரை நெருக்கமாக இருந்த ரைசாவை வம்புக்கு இழுக்கின்றனர்.

சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் ஓவியா, பிந்துமாதவி முன்னிலையில் ரைசாவில் மறைமுகமாக கேலி செய்யும் வகையில் ஜூலியும் காயத்ரியும் பாட்டுபாட அதை ரைசா முறைத்து பார்த்து கொண்டிருக்கின்றார்.

மேலும் அடுத்த காட்சியில் 'ரைசாவை இங்க வாங்க பேசலாம் என காயத்ரியும் ஜூலியும் அழைக்க, 'வந்துட்டா வம்பு இழுக்கக்கூடாது' என்று இருவரையும் ரைசா எச்சரிப்பது போன்று முடிகிறது. இந்த நிலையில் புதியதாக வந்த பிந்துமாதவியும் ஓவியாவும் புதிய கூட்டணி அமைத்துள்ளதாகவும் இந்த புரமோவில் இருந்து தெரிகிறது.

More News

'பிக்பாஸ்' ஓவியாவின் அடுத்த படம்: பிரபல இயக்குனர் தகவல்

மிர்ச்சி சிவா இயக்கத்தில் சி.எஸ்.அமுதன் இயக்கிய 'தமிழ்ப்படம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாகவும், முதல் பாகத்தின் கூட்டணியே இரண்டாவது பாகத்திலும் தொடர்வதாகவும் வெளிவந்த செய்தியினை நேற்று பார்த்தோம்.

'விக்ரம் வேதா' தெலுங்கு ரீமேக்கில் யார் யார்?

விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'விக்ரம் வேதா' திரைப்படம் இரண்டாவது வாரத்திலும் நல்ல வசூலை பெற்று வருகிறது என்பதையும் இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் விரைவில் ரீமேக் ஆகவிருப்பதாக வெளிவந்த செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்...

அஜித்துக்கு முந்தைய நாளை அழுத்தமாக பிடித்து கொண்ட முருகதாஸ்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஒவ்வொரு செய்தியும் வியாக்கிழமை செண்டிமெண்ட் உடன் வருவது அனைவரும் அறிந்தே. ஃபர்ஸ்ட்லுக், டீசர் மற்றும் இந்த படத்தின் ரிலீஸ் வரை அனைத்துமே வியாழக்கிழமையே நடந்து வருகிறது. அஜித்தும், இயக்குனர் சிவாவும் சாய்பாபா பக்தர்கள் என்பதால் இந்த வியாழக்கிழமை செண்டிமெண்ட்டை கடைபிடித்து வருவதாக

ரைசாவின் ரகசியத்தை ஓவியா கூறியது சரியா?

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இன்னொருவர் போல் நடித்து காட்ட வேண்டும் என்பதுதான் டாஸ்ல்

ஆரவ்வின் மனமாற்றம் ஓவியாவை வெளியேற்றுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள பங்கேற்பாளர்களில் ஓவியாவுக்கு உண்மையாக ஆறுதல் கூறவும், அறிவுரை கூறவும் இருக்கும் ஒரே நபர் ஆரவ் என்றே கருதப்பட்டது. ஓவியாவும் ஆரவ்வை தனது குரு என்றே கூறி வந்தார்...