ஜூலை 22: ஒரே நாளில் இணையும் ரஜினி-விஜய்-தாணு

  • IndiaGlitz, [Tuesday,July 12 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் நேற்று சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் கிடைத்தது என்பதை பார்த்தோம். சென்சார் சான்றிதழ் கிடைத்ததும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 22 என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில் இதே ஜூலை 22ஆம் தேதிதான் இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் 100வது நாள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான 'தெறி' பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி தொடர்ச்சியாக சென்னை உள்பட ஒருசில நகரங்களில் இன்னும் திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படம் ஜூலை 22ஆம் தேதி 100வது நாள் என்ற மைல்கல்லை எட்டவுள்ளது.

ஜூலை 22ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள 'கபாலி' படத்தையும், அதே 22ஆம் தேதி 100வது நாள் விழாவை வெற்றிகரமாக கொண்டாடவுள்ள 'தெறி' படத்தையும் தயாரித்தவர் கலைப்புலி எஸ்.தாணு என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்சேதுபதிக்கு வில்லனாகும் சூர்யா வில்லன்

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது என்பதை பார்த்தோம். விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன்...

'கபாலி' ரிலீஸ் தேதி. கலைப்புலி எஸ்.தாணு அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் இன்று சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றது என்பதையும் இந்த படம் 152 நிமிடங்கள் ஓடவுள்ளதாகவும் வந்த அதிகாரபூர்வ செய்தியை சற்று முன்னர் பார்த்தோம்...

'கபாலி' சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் சென்சார் இன்று நடைபெற்று வருவதாக ஒருசில மணி நேரங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்த நிலையில்...

உலகிலேயே இதுதான் முதல்முறை. 'கபாலி' செய்துள்ள இன்னொரு சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'கபாலி' படத்தின் புரமோஷன்கள் இதுவரை இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாக்கள் கூட கண்டிராத வகையில் வானத்திற்கும் பூமிக்கும் புரமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன...

தனுஷின் 3வது இந்தி படம் இதுதான்

பிரபல நடிகர் தனுஷ் தற்போது கோலிவுட்டில் 'கொடி', 'தொடரி', 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'வடசென்னை' மற்றும் கார்த்திக் சுப்புராஜ் படம்...