'விவேகம்' படத்தை பின்தொடரும் விஜய்சேதுபதி படம்

  • IndiaGlitz, [Wednesday,October 11 2017]

விஜய்சேதுபதியின் புதிய படமான 'ஜூங்கா' திரைப்படம் தற்போது வெளிநாட்டில் விறுவிறுப்பான படப்பிடிப்பில் உள்ளது. 'வனமகன்' சாயிஷா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தை 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பட இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார்

இந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பாரீஸ் நகரில் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் பல்கேரியா, ஆஸ்திரியா செல்லவுள்ளனர். இந்த இரு நாடுகளிலும் மூன்று பாடல்களை இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் நடன இயக்கத்தில் படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதே பல்கேரியா மற்றும் ஆஸ்திரியாவில் தான் அஜித்தின் 'விவேகம்' படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு படப்பிடிப்புகளை முடித்துவிட்டு 'ஜூங்கா' படக்குழுவினர் வரும் நவம்பர் 4ஆம் தெதி நாடு திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் விஜய்சேதுபதி ஸ்டில்கள் படத்தின் எதிர்பார்ப்பை எகிர வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மலைக்க வைக்கும் 'மெர்சல்' ரிலீஸ் திரையரங்குகளில் எண்ணிக்கை

இந்த ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு 'மெர்சல்' தீபாவளி என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படம் உலகின் பெரும்பாலான நாடுகளில் மிக அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

பஞ்சாயத்து தலைவர் கேரக்டர் படத்தில் எத்தனை நிமிடங்கள்? அட்லி

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த படத்தின் புதுப்புது செய்திகள் படத்தின் எதிர்பார்ப்பை உயர்த்தி கொண்டே வருகிறது.

மல்டிபிளக்ஸ் முதலாளிகளின் பிடிவாதத்தால் பேச்சுவார்த்தையில் சிக்கல்?

தமிழக அரசு திரைத்துறையினர்களுக்கு விதித்த 10% கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில்,

அழிக்க நெனச்சா ரெண்டா வருவானே! மெர்சலின் மேஜிக் பாடல் வரிகள்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் மேஜிக் கேரக்டருக்காக ஒரு போனஸ் பாடல் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அந்த பாடலின் இரண்டு வரிகளை பாடலாசிரியர் விவேக் ஏற்கனவே வெளியிட்ட செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

'மெர்சலுக்கு' முன் விஜய்-வடிவேலு கூட்டணியின் காமெடி படங்கள்

'மெர்சலுக்கு' முன் விஜய்-வடிவேலு கூட்டணியின் காமெடி படங்கள்