'தலைவி' படத்தில் நடிக்க மறுத்த பிரபல ஹீரோ!

  • IndiaGlitz, [Thursday,November 21 2019]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஒரே நேரத்தில் 3 இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர் என்பது தெரிந்ததே. அவற்றில் ஒன்று இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கி வரும் ’தலைவி’ என்ற திரைப்படம் ஆகும். ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடிகர் அரவிந்த்சாமி நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் எம்ஜிஆர் உடன் பணிபுரிந்தவர்கள், எம்ஜிஆரின் சக கலைஞர்கள் சிலரின் கேரக்டர்களும் படத்தில் இருப்பதாகவும் அவற்றில் முக்கியமாக என்டி ராமராவ் கேரக்டர் படத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து என்டி ராமராவ் கேரக்டரில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகருமான என்டிஆரின் பேரனுமான ஜூனியர் என்.டி.ஆரை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தனது தாத்தா வேடத்தில் தன்னால் நடிக்க முடியாது என்றும், தன்னால் மட்டுமின்றி அவரைப் போல் யாராலும் நடிக்க முடியாது என்றும் கூறி அவர் நடிக்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து இந்த கேரக்டர் படத்தில் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 

More News

பள்ளி மாணவியை கடித்த பாம்பு! ஆசிரியர்கள் அலட்சியத்தால் பறிபோன உயிர்!

10 வயது பள்ளிச் சிறுமியை பாம்பு கடித்த நிலையில் ஆசிரியர்களின் அலட்சியத்தால் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது 

அக்னி சிறகுகள்' அக்சராஹாசனின் கேரக்டர் அறிவிப்பு

உலக நாயகன் கமலஹாசனின் மகளும் நடிகையுமான அக்சராஹாசன் அஜித்தின் 'விவேகம்' மற்றும் விக்ரமின் 'கடாரம் கொண்டான்' ஆகிய திரைப்படங்களில் நடித்த நிலையில்

ரஜினியின் அதிசயம்-அற்புதம் பேட்டிக்கு முதல்வரின் உடனடி ரியாக்சன்

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் ஐகான் விருதை பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் சென்னை திரும்பினார்.

ஆம் 2021ல் அதிசயம் நடந்தே தீரும்: சீமான்

கோல்டன் ஐகான் விருதை பெற்று இன்று சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் பேட்டியளித்தபோது, '2021 ஆம் ஆண்டு நடைபெறும்

யார் முதல்வர் வேட்பாளர்? பளிச் பதில் கூறிய ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால்,