close
Choose your channels

'ஜூராஸிக் வேர்ல்ட்' மூன்றாம் பாகம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Friday, April 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹாலிவுட்டில் வெளியாகும் தொடர் படங்களில் ஒன்று ’ஜுராசிக் வேர்ல்ட்’ என்பதும் இந்த படத்தின் இரண்டு பாகங்கள் ஏற்கனவே கடந்த 2015 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ள நிலையில் மூன்றாவது பாகம் கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’ஜுராசிக் வேர்ல்ட்’ படத்தின் மூன்றாவது பாகமான ’ஜுராசிக் வேர்ல்ட் டாமினேஷன்’ என்ற திரைப்படம் வரும் ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் இந்த படத்தை பார்ப்பதற்காக காத்திருக்கின்றனர்.

இந்த படத்தின் பட்ஜெட் 165 மில்லியன் அமெரிக்க டாலர் என்பதும் இந்த படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய பாகங்கள் போக்கவே இந்த மூன்றாவது பாகம் உலகம் முழுவதும் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.