சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டார் நீதிபதி கர்ணன்

  • IndiaGlitz, [Thursday,May 11 2017]

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்து ஆறு மாதங்கள் சிறையில் அடைக்க சுப்ரீ கோர்ட் நேற்று முன் தினம் உத்தரவிட்டதை அடுத்து, நீதிபதி கர்ணன் தலைமறைவானதாக கூறப்பட்டது. அவரை தமிழக, ஆந்திரா, கொல்கத்தா போலீசார் வலைவீசி தேடி வரும் நிலையில் இன்று காலை அவரது வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் நீதிபதி கர்ணன், குடியரசு தலைவரை சந்திக்க இருப்பதாகவும், அவரது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கர்ணன் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நீதிபதி கர்ணன் தனது வழக்கரிஞர் நெடுமாறப்பா மூலம் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும், அவரது மன்னிப்பை ஏற்று, தண்டனையை திரும்ப பெறும் கோரிக்கை குறித்து பரிசிலீப்பதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதிலளித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
நீதிபதி கர்ணன் மன்னிப்பு கேட்டதை அடுத்து, இந்த பிரச்சனை வெகுவிரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மோகன்லாலின் 'த்ரிஷ்யம்' வசூலை வீழ்த்திய 'பாகுபலி 2'

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் சாதனை வசூல் செய்து வருகிறது.

இளையதளபதியின் 'போக்கிரி 2': பிரபல தயாரிப்பாளர் அதிரடி முடிவு

இளையதளபதி விஜய், அசின் நடிப்பில் பிரபுதேவா இயக்கிய படம் 'போக்கிரி'. விஜய் நடித்த படங்களில் சூப்பர் ஹிட் ஆன படங்களில் ஒன்று

'விவேகம்' டீசர் சாதனை குறித்து Forbes பத்திரிகையில் செய்தி

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியான 'பாகுபலி 2' என்ற தென்னிந்திய திரைப்படம் உலகின் கவனத்தை ஈர்த்த நிலையில் நேற்று நள்ளிரவு வெளியான 'விவேகம்' படத்தின் டீசர் சாதனை மீண்டும் உலகையே தென்னிந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது

விஜய் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார்

பெரிய நடிகர்கள் மீது விளம்பரத்திற்காக அல்லது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக அவ்வப்போது நீதிமன்றத்தில் வழக்கு, காவல்துறையில் புகார் ஆகியவை நடைபெற்று வருவதுண்டு

ஓடி ஒளியவில்லை. சென்னையில்தான் இருக்கின்றார். நீதிபதி கர்ணன் வழக்கறிஞர் மனுதாக்கல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தா நீதிபதி கர்ணன் சர்ச்சைக்குரிய உத்தரவுகளை பிறப்பித்த நிலையில் அவரை மனநல சோதனைக்கு உட்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.