கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை. சுப்ரீம் கோர்ட் அதிரடி

  • IndiaGlitz, [Tuesday,May 09 2017]

கடந்த சில மாதங்களாக முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதியும், இந்நாள் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியுமான கர்ணன் அவர்களுக்கும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வருகிறது. பல்வேறு நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்த நீதிபதி கர்ணன் மீது சுப்ரீம் கோர்ட் வழக்குப்பதிவு செய்ததோடு, அவருக்கு மனநல சோதனை செய்யவும் உத்தரவிட்டது.

ஆனால் மனநல சோதனைக்கு சம்மதிக்காத நீதிபதி கர்ணன், சுப்ரீம் கோர்ட்டின் 7 நீதிபதிகளுக்கும் மனநல சோதனை செய்ய உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று அவர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மனநல சோதனைக்கு ஒத்துழைப்பு தராதது, மற்றும் நிதிமன்ற அவமதிப்பு ஆகியவற்றுக்காக நீதிபதி கர்ணன் அவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் சற்றுமுன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய மக்கள் அனைவருமே பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் நீதிபதிகள் மாறி மாறி தங்களுக்குள்ளாகவே சிறைத்தண்டனை விதித்து பிறப்பிக்கும் உத்தரவுகள் நீதித்துறையையே கேலிக்குரியாக்குவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

உழைப்பாளிகளுக்கு பெருமை சேர்த்த தமிழ் சினிமா

இன்று மே-1, உழைப்பாளர்கள் தினம். வருடம் முழுவதும் உழைக்கும் உழைப்பாளர்களை பெருமைப்படுத்த அவர்களுக்கு என்று ஒரு நாள் கொண்டாடப்படும் தினம்.

தல-தளபதி குறித்து பிரபல நடிகை-அரசியல்வாதியின் கருத்து

தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்களாக இருக்கும் தல அஜித் மற்றும் இளையதளபதி விஜய் குறித்த செய்திகள் வராத நாளோ அவர்களை குறித்து பிரபலங்கள் கருத்து தெரிவிக்காத நாளோ இதுவரை இருந்ததில்லை...

உலகப்புகழ் பெற்ற அதிரடி மன்னன் புரூஸ்லீயின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

கடந்த சில வருடங்களாகவே பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படங்கள் இந்திய சினிமாவில் ஹிட்டாகி வரும் நிலையில் மீண்டும் ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் திரைப்படமாகவுள்ளது...

'விஐபி 2' ரிலீஸ் எப்போது? தனுஷின் அதிரடி அறிவிப்பு

தனுஷ் இயக்கிய 'பவர்பாண்டி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிகரமான 25வது நாள் என்ற மைல்கோட்டை நேற்று கடந்தது...