ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,August 18 2017]

'36வயதினிலே' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன ஜோதிகா, அந்த படத்தின் வெற்றியை அடுத்து நடித்துள்ள படம் 'மகளிர் மட்டும். இந்த படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்ஷன்ஸ், சென்சார் ஆகிய அனைத்து பணிகளும் முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரும் ஜோதிகாவின் கணவருமான சூர்யா, ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இதன்படி இந்த படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.

'குற்றம் கடிதல்' என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய இயக்குனர் பிரம்மா இயக்கியுள்ள இந்த படத்தில் ஜோதிகா, சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா, நாசர், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் சூர்யா சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு மணிகண்டன் ஒளிப்பதிவும், பிரேம் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.