ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,May 15 2020]

ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதமே ரிலீசாக திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது

இந்த நிலையில் இந்த படம் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக செய்திகள் வெளிவந்து, அந்த செய்தி பின்னர் உறுதி செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. மே மாதம் முதல் வாரமே இந்த படம் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிலையில் தற்போது இரண்டாவது வாரம் ஆகியும் இந்த படம் ரிலீஸ் ஆகாததால் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது

இந்த நிலையில் சற்று முன்னர் அமேசான் பிரைமில் ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் மே 29ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து கடந்த இரண்டு மாதங்களாக புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் தற்போது ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ ரிலீஸாவது சினிமா ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தி ஆகும். அது மட்டுமின்றி இனி அடுத்தடுத்து ஓடிடி பிளாட்பாரத்தில் மேலும் சில திரைப் படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

ஜோதிகா, தியாகராஜன், பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப்போத்தன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேஜே பிரட்ரிக் இயக்கியுள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

சென்னை மருத்துவமனையில் மீண்டும் கொரோனா நோயாளி தப்பியோட்டம்: பரபரப்பு தகவல்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 60 வயது மதிக்கத்தக்க கொரோனா நோயாளி ஒருவர் திடீரென காணாமல் போனதை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள்

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் கொரோனா வைரஸ் பாதிப்பு!!! விளைவுகள் எப்படி இருக்கும்???

பங்களாதேஷில் அமைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா இன மக்களுக்கான அகதிகள் முகாமில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடும் சர்ச்சையை ஏற்படுத்திய கொரோனா அணுகுமுறைகள்!!! இந்தியாவில் இது சாத்தியமா???

கொரோனா பரவல் தடுப்புக்காக சில நாட்கள், இந்திய மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியிருந்தோம்.

விஜய்யை பார்த்து பொறாமைப்பட்ட அஜித்!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களாகிய அஜித்-விஜய் ஆகிய இருவரும் பர்சனலாக நெருங்கிய நண்பர்கள் என்றாலும் தொழில் ரீதியாக கடுமையான போட்டியை உள்ளவர்கள்.

சிம்புவின் மனைவிக்காக வெயிட்டிங்: பிந்துமாதவி

கொரோனா ஊரடங்கு உத்தரவு விடுமுறையில் நடிகர் சிம்பு நேற்று சமையல் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம்.