ஜோதிகாவின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Tuesday,April 30 2019]

'36 வயதினிலே' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன நடிகை ஜோதிகா, அந்த படத்தின் வெற்றியால் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது முன்னணி நடிகைகளுக்கு இணையாக ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகி வந்த படம் ஒன்றில் ஜோதிகா நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் முடிவுக்கு வந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஜோதிகாவுடன் முக்கிய வேடத்தில் ரேவதி நடித்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனந்தகுமார் ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.
 

More News

இமயமலையில் பனிமனிதனா? காலடி தடத்தை பதிவு செய்த இந்திய ராணுவம்!

பனிமனிதன் குறித்து பல புராணக்கதைகளில், திரைப்படங்களில், வீடியோ கேம்ஸ்களில் நாம் பார்த்திருக்கின்றோம், கேள்விப்பட்டிருக்கின்றோம்.

தாலி கட்டிய அடுத்த நிமிடம் பப்ஜி விளையாடிய மணமகன்: மணமகள் அதிர்ச்சி

பப்ஜி என்று சொல்லப்படும் ஆன்லைன் விளையாட்டிற்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல இளைஞர்கள் அடிமையாகியுள்ள நிலையில் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும்

ரஜினியின் 'தர்பாரில் இணைந்த 'காலா' பட நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

அடுத்த படத்தையும் என்னை வைத்து எடுங்கள்: பிரபல இயக்குனரிடம் சூர்யா வேண்டுகோள்

சூர்யா, சாய்பல்லவி நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சூர்யா பேசியபோது,

இராவண கோட்டத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்

'மதயானைக்கூட்டம்' பட இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கும் அடுத்த படமான 'இராவண கோட்டம்' என்ற படத்தின் நாயகனாக கே.பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கவுள்ளார்