நிஜமாகவே சிகரத்தை அடைந்த ஜோதிகா.. இதுவரை எந்த நடிகையும் செய்யாத புதிய முயற்சி..!

  • IndiaGlitz, [Monday,April 29 2024]

நடிப்பில் சிகரத்தை அடைந்தவர்கள் என்று சில நட்சத்திரங்களை ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில் நடிகை ஜோதிகா உண்மையாகவே எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை ஜோதிகா அவ்வப்போது சுற்றுலா செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் எவரெஸ்ட் சிகரத்திற்கு சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைவது, அங்குள்ள ஒரு சிறிய வீட்டில் தங்கியிருப்பது, மின்சாரம் இல்லாத அந்த இடத்தில் சோலார் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை வைத்து வாழ்வது, ட்ரக்கிங் செல்வது, பனி மழையில் நனைவது, அங்கு கிடைக்கும் உணவுகளை சாப்பிடுவது, உலகின் மிகச் சிறிய ரன்வே கொண்ட விமான நிலையத்தை அடைவது, உலகின் மிக உயரத்தில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிடுவது உள்ளிட்ட காட்சிகளை பதிவு செய்துள்ளார்.

இதுவரை வேறு எந்த நடிகையும் செய்யாத புதிய முயற்சி செய்த ஜோதிகாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உண்மையாகவே நீங்கள் சிகரத்தை அடைந்து விட்டீர்கள் என்று வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் நடிகை ஜோதிகா நடித்த ’சைத்தான்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ’ஸ்ரீகாந்த்’ உட்பட இரண்டு ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

'குக் வித் கோமாளி'க்கு போட்டியாக சன் டிவி நிகழ்ச்சி.. விஜய் டிவி பிரபலங்களை இழுத்துவிட்ட வெங்கடேஷ் பட்..!

விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் இரண்டு எபிசோடுகளும் கலகலப்பாகவும் சூப்பரான இருந்ததாக விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கும்

ஒரு வார்த்தை கூட உங்களை பற்றி சொல்லலையே.. வருத்தப்பட்ட ரசிகருக்கு வெங்கடேஷ் பட் சொன்ன பதில்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி நேற்று ஆரம்பித்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்களிலும் பங்கேற்ற வெங்கடேஷ் பட் குறித்து யாருமே பேசாதது குறித்து ரசிகர் ஒருவர் வருத்தப்பட, அவருக்கு ஆறுதல்

கையில் துப்பாக்கி, உடம்பெல்லாம் ரத்தம்.. சமந்தாவின் புதிய பட அறிவிப்பு.. டைட்டில் போஸ்டர் வீடியோ..!

நடிகை சமந்தா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

குக் வித் கோமாளி ஸ்ருதிகாவின் பள்ளித்தோழி இந்த பிரபலமா?  சின்ன வயதில் செய்த அட்டகாசங்கள்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் பெற்றவர்  ஸ்ருதிகா என்பதும், இவர் மறைந்த நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தி என்பது பலரும் அறிந்ததே

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நேரத்திலும் ஒரு போட்டோஷூட்.. அமலாபால் வைரல் வீடியோ..!

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவருக்கு இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தை பிறந்து விடும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிறைமாத