ராகவா லாரன்ஸ் இயக்கும் 'நாகா'வில் ஜோதிகா?

  • IndiaGlitz, [Wednesday,August 05 2015]

எட்டு வருட இடைவெளிக்கு பின்னர் சமீபத்தில் ஜோதிகா நடித்த '36 வயதினிலே' திரைப்படம் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் அமோக ஆதரவை பெற்றது மட்டுமின்றி நல்ல வசூலும் செய்தது. ஒரு தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் மீண்டும் வெற்றிகரமாக ரீ எண்ட்ரி ஆன ஜோதிகா, நல்ல ரோல் கிடைத்தால் மீண்டும் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் 'காஞ்சனா 2' என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ராகவா லாரன்ஸ் இயக்கவிருக்கும் 'காஞ்சனா 3' என்ற 'நாகா' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஜோதிகா இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அவர் கேட்கும் தொகையை தயாரிப்பு நிறுவனமும் தர தயாராக உள்ளதாக கூறப்படும் நிலையில் ஜோதிகா என்ன முடிவெடுப்பார் என்பதை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

ஜோதிகா ஏற்கனவே ரஜினி நடித்த 'சந்திரமுகி' படத்தில் பேய் வேடத்தில் நடித்த அனுபவம் கொண்டவர் என்பதால் இந்த படத்திலும் அவர் பேயாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

விஜய்யின் 'கத்தி' தெலுங்கு ரீமேக்கில் ஜூனியர் என்.டி.ஆர்?

இளையதளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 'கத்தி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இருவேடங்களில் விஜய் மற்றும் சமந்தா நடித்த இந்த திரைப்படம்...

தனுஷ்-சூர்யா இடையே ஏற்பட்ட திடீர் போட்டி

சமீபகாலமாக மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது...

மீனவ பெண் வேடத்தில் விஜய் நாயகி

சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கவுள்ள ரஞ்சித் இயக்கிய முதல் படமான 'அட்டக்கத்தி' என்ற படத்தின் நாயகி நந்திதா ஸ்வேதா...

ஆர்யா 'பெரிய தல'- நான் 'சின்ன தல' யட்சன் இசைவிழாவில் கிருஷ்ணா பேச்சு

ஆர்யா, கிருஷ்ணா இணைந்து நடித்த 'யட்சன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது...

கலாமின் காலடி சுவட்டில் ராகவா லாரன்ஸின் ரூ.1கோடி

பிரபல இயக்குனர், நடிகர், நடன இயக்குனர் என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள 'மொட்ட சிவா கெட்ட சிவா'...