'மாமன்னன்' படத்தில் கே பாலசந்தர் மருமகள்.. எந்த கேரக்டரில் நடித்திருந்தார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,July 01 2023]

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘மாமன்னன்’ திரைப்படம் கடந்த வியாழன் என்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் மருமகள் கீதா கைலாசம் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘மாமன்னன்’ திரைப்படம் என்பது வடிவேலுவுக்காகவே எடுக்கப்பட்டது போல் அவரது கேரக்டரை மாரி செல்வராஜ் செதுக்கியிருக்கிறார் என்பது தெரிந்ததே. வடிவேலுவும் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது குணச்சித்திர நடிப்பை அருமையாக வெளிப்படுத்தி இருப்பார் என்பதும் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் வடிவேலுக்கு மனைவியாக வீராயி என்ற கேரக்டரில் நடித்தவர் தான் கே. பாலச்சந்தர் மருமகள் கீதா கைலாசம். இவர் ஏற்கனவே ’சார்பாட்டா பரம்பரை’ படத்தில் பசுபதிக்கு மனைவியாக சில காட்சிகளில் நடித்துள்ளார். அதேபோல் ’வீட்ல விசேஷம்’ திரைப்படத்தில் நர்ஸ் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மாமன்னன்’ படத்தில் நடித்தது கொடுத்த கீதா கைலாசம் கூறிய போது ’வடிவேலுவுடன் நடிப்பது மிகவும் பயமாக இருந்தது என்றும் அதே நேரத்தில் சவாலாக இருந்தது என்றும் கூறியிருந்தார். குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரவுடிகள் அவருடைய வீட்டை அடித்து நொறுக்கும் காட்சியில் பயந்து போய் கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருக்கும் போது அவரது நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உங்களை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.. மக்கள் இயக்க நிர்வாகிக்கு விஜய் எழுதிய கடிதம்..!

 நீங்கள் செய்த செயலை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிக்கு விஜய் தனது கைப்பட கடிதம் எழுதியுள்ள தகவல் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

'மாவீரன்' படத்தின் சூப்பர் அப்டேட்.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் இம்மாதம் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில்

ஜூலை 21ல் வெளியாகும் ஷங்கரின் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' மற்றும் 'இந்தியன் 2' ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் அவருடைய எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் திரைப்படம் ஒன்றின் அதிகாரப்பூர்வ

செம உற்சாகம்… பார்டிக்கு ரெடியான நடிகை கங்கனா ரனாவத்… காரணம் இதுதான்?

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பை தவிர, இயக்குநர், தயாரிப்பாளர் அவதாரதங்களை எடுத்துள்ளார்

சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்: வேற லெவல் எதிர்பார்ப்பு..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கப் போகிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது அந்த செய்தி கிட்டத்தட்ட உறுதி