அரசியலில் வாரிசுகள் ஒரே இரவில் முன்னுக்கு வந்துவிடலாம்: உதயநிதி குறித்து பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Saturday,July 06 2019]

நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு சமீபத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. உதயநிதி தீவிர அரசியலில் இறங்கி ஒருசில மாதங்களே ஆன நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய பதவியா? என அரசியல் விமர்சகர்கள் உதயநிதியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என வாரிசுகள் மட்டுமே பதவி பெற்று வருவதாகவும், தொண்டர்கள் எப்போதுமே தொண்டர்களாகவே இருப்பதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் உதயநிதிக்கு பதவி கொடுத்ததை திமுக, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்த நிலையில் உதயநிதிக்கு கொடுக்கப்பட்ட பதவி குறித்து இயக்குனர் கே.பாக்யராஜ் கருத்து கூறியபோது, 'சினிமாவில் வாரிசுகளுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி வசப்படுவதில்லை; போராடிதான் வெற்றிபெற வேண்டியுள்ளது. ஆனால் அரசியலில் அப்படியில்லை, ஒரே இரவில் முன்னுக்கு வந்து விடுகிறார்கள் என உதயநிதி பதவி குறித்து பாக்யராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
 

More News

வனிதா குரூப்பில் இணைந்த மீராமிதுன்! தனித்துவிடப்பட்ட மதுமிதா

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக வனிதா தலைமையிலான ஒரு குரூப்பும், மதுமிதா தலைமையிலான ஒரு குரூப்பும் உண்டாகியது. 'தமிழ்ப்பெண்' என்ற ஒரே ஒரு வார்த்தையை பயன்படுத்தியதால்

டீசரில் நிர்வாணம், டிரைலரில் லிப்கிஸ்: 'ஆடை' அமலாபால் அதிரடி

'ஆடை' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானபோது அதில் இடம்பெற்றிருந்த நிர்வாண காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று வெளியாகியுள்ள டிரைலரில் அமலாபாலின் லிப்கிஸ்

பாஞ்சாலிக்கு கூட 5 கணவர்கள் தான், எனக்கு 15 கணவர்கள்: அமலாபால்

அமலாபால் நடித்த 'ஆடை' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது,. இந்த விழாவில் அமலாபால் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

'கைதி'யை அடுத்து முடிவுக்கு வந்த கார்த்தியின் அடுத்த படம்

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கைதி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

'அறம் 2' படத்தின் நாயகி நயன்தாராவா? சமந்தாவா?

இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கம்பீரமான கலெக்டர் வேடத்தில் நடித்த நயன்தாராவுக்கு பாராட்டுக்கள்