close
Choose your channels

ரஜினியை உச்சநடிகர்கள் பின்பற்ற வேண்டும்: பிரபல தயாரிப்பாளர் அறிவுரை

Thursday, January 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பேசிய பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் ரஜினி போல் மற்ற உச்ச நட்சத்திரங்களும் தங்களுக்கு வாழ்வு கொடுத்த பழைய தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தன்னை அறிமுகம் செய்த மற்றும் தனக்கு ஹிட் படங்களை தயாரித்து கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு என ஒரு படம் நடித்து கொடுத்தார் என்றும் அந்த படத்தில் கிடைத்த லாபத்தால் அதன் தயாரிப்பாளர்கள் சொந்த வீடு வாங்கி செட்டில் ஆகி விட்டார்கள் என்றும் கூறினார்

அதேபோல் அஜித் உள்பட மற்ற உச்ச நட்சத்திரங்களும் தங்களுக்கு ஆரம்பத்தில் கைகொடுத்த தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அஜீத்தை ஹீரோவாக அறிமுகம் செய்த சோழா பொன்னுரங்கம் தற்போது கஷ்டமான நிலையில் உள்ளதாகவும் அவருக்கு உதவி செய்ய அஜித் முன்வர வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்

அஜித் மட்டுமின்றி மற்ற நடிகர்களும் ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட் படத்தில் நடித்து தான் தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கின்றார்கள் என்றும், எனவே அவர்கள் பழையதை மறக்காமல் தற்போது கஷ்டப்பட்டு வரும் தயாரிப்பாளருக்கு உதவி செய்ய முன் வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கே ராஜன் அவரக்ளின் இந்த வேண்டுகோளை மாஸ் நடிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos