சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,April 29 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் வரும் மே மாதம் 9ஆம் தேதி வெளியாகும் என்றும் சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்த பாடல்களை கேட்க ரஜினி ரசிகர்கள் தயார் ஆகவும் என்றும் 'காலா' தயாரிப்பாளர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், ஹூமாகுரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டேல், சுகன்யா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. முரளி ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

இன்று முதல் ஆக்சன் களத்தில் இறங்கும் ஆண்ட்ரியா

'தரமணி' படத்தில் தரமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஆண்ட்ரியா ஏற்கனவே தனுஷின் 'வடசென்னை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

உள்ளாடைக்குள் ஒளித்து நகை திருடிய பெண் - கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் 

நகைக்கடை ஒன்றில் நகை வாங்குவது போல் நடித்த இளம்பெண் ஒருவர் கடைக்காரர் அசந்த நேரத்தில் நகைகளை திருடி தனது உள்ளாடைக்குள் ஒளித்த வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பெண் பத்திரிகையாளர் குறித்து எஸ்.வி,சேகர் தனது முகநூலில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தின் அசத்தலான முதல் நாள் வசூல்

மார்வல் சூப்பர் ஹீரோக்கள் திரைப்பிரவேசத்தின் பத்தாவது ஆண்டுக் கொண்டாட்டமாக நேற்று உலகம் வெளியாகியுள்ள அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் இந்தியா முழுவதிலும் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2018: தல தோனிக்கு மட்டுமே கிடைத்த மிகப்பெரிய பெருமை

ஐபிஎல் போட்டிகள் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழா என்றால் அது மிகையாகாது. கடந்த 11 ஆண்டுகளாக இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.