இந்த அரசு யாருக்கான அரசு என்பதே கேள்விக்குறியாக உள்ளது. பா.ரஞ்சித்

  • IndiaGlitz, [Saturday,September 02 2017]

மருத்துவ படிப்பு கனவு கலைந்ததால் நேற்று தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவுக்கு கோலிவுட் திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நேற்று ஜி.வி.பிரகாஷ் அரியலூர் சென்று அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் என்பதை பார்த்தோம், இந்த நிலையில் இன்று 'கபாலி', 'காலா' இயக்குனர் ரஞ்சித் அனிதாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித், 'மாணவி அனிதா என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து அதை நோக்கி நகரும் வகையில் கடுமையாக உழைத்துள்ளார். ஆனால் அவருடைய முயற்சியை, கனவை நசுக்கும் வகையில் நீட் போன்ற ஆயுதங்களை தயார் செய்து கொண்டே இருக்கின்றனர்.

ஐஐடியில் எப்படி சாதாரணமானவர்களை நுழைய முடியாமல் செய்தார்களோ, அதே மாதிரியான ஒரு சிஸ்டத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தி எளிய மக்களின் கனவை சிதைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளனர். இந்த அரசு யாருக்கான அரசு என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

அனைத்து வகையிலும் முயற்சி செய்துவிட்டு அதில் தோல்வி அடைந்ததால் கடைசியில் இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று வெறுப்படையும் நிலைக்கு அனிதா தள்ளப்பட்டுள்ளார். இந்த வலியை நாம் என்று உணரப்போகின்றோம் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது

More News

ஏழை மாணவியின் எம்பிபிஎஸ் சீட்டுக்கு நேரடியாக தலையிட்ட கேரள முதல்வர்

1176 மதிப்பெண்கள் எடுத்து உயிரையும் கொடுத்த நிலையில் ஏழை மாணவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்காத முதல்வர் மத்தியில் ஏழை மாணவி ஒருவருக்கு சீட் கிடைக்க தானே முன்வந்து உறுதி மொழி கொடுத்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்...

இறந்த காலமாகிவிட்டது ஒரு இளந்தளிர். அனிதா குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டதற்கு ஆவேசமாக கண்டனக்குரல் எழுப்பிய நடிகர் கமல்ஹாசன், இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இதுகுறித்து பேசுகிறார்...

முதல்வர் அறிக்கையில் 'நீட்'டும் இல்லை, நீதியும் இல்லை: நெட்டிசன்கள் கருத்து

நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை போராடிய அனிதா நேற்று பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார்....

அனிதாவின் அவசரம் முன்னுதாரணம் அல்ல: நடிகர் விவேக்

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று பல கோலிவுட் பிரபலங்கள் ஆவேசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்...

இது ஜனநாயகம் அல்ல, போர்க்களம்: கபிலன் வைரமுத்து

ஜனநாயக நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை கல்வி. அந்த கல்வி மறுக்கப்படுவது அதுவும் ஒரு ஏழை மாணவிக்கு மறுக்கப்படுவது சமூக நீதியை குழிதோண்டி புதைப்பதற்கு சமம்...