close
Choose your channels

அமெரிக்காவில் காலா செய்த சாதனை

Saturday, June 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்காவில் காலா செய்த சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனம் மற்றும் பெருவாரியான வசூலை பெற்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த படம் சென்னையில் முதல் நாளில் ரூ.1.74 கோடி வசூலாகி புதிய சாதனை ஏற்படுத்தியது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது 'காலா' திரைப்படம் அமெரிக்காவிலும் வசூல் சாதனை செய்துள்ளது. இந்த படம் அமெரிக்காவில் மூன்றே நாட்களில் ஒரு மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இதற்கு முன்னர் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்', 'லிங்கா' மற்றும் 'கபாலி' ஆகிய படங்கள் ஏற்கனவே மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்திருந்த நிலையில் தற்போது 'காலா' படத்தையும் சேர்த்து ரஜினி நடித்த நான்கு படங்கள் மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் முதல் வாரயிறுதி வசூல் புதிய சாதனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ரஜினிகாந்த் தெரிவித்த ஒருசில கருத்துக்களால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டிருந்த நிலையிலும் அவரது படம் வெற்றி பெற்றுள்ளது அவரது எதிர்பாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.