close
Choose your channels

சூர்யாவின் 'காப்பான்' படத்தின் முக்கிய அப்டேட்

Thursday, January 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'காப்பான்' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி அதன்பின் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடந்து வந்தது குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றுமுதல் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சண்டிகரில் தொடங்கவுள்ளதாகவும், அங்கு இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சூர்யாவின் 'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதால் இரண்டு படங்களும் அடுத்தடுத்த வெளியாக வாய்ப்பு உள்ளது.

பிரதமர் கேரக்டரில் மோகன்லாலும், அவருடைய காப்பாளர் கேக்ரடரில் சூர்யாவும் நடித்து வரும் இந்த படத்தில் சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகின்றனர் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இந்த படம் லைகாவின் தயாரிப்பில் உருவாகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.