close
Choose your channels

போராட்டத்தை உருவாக்குற சூழ்நிலையும் தப்புதானே! 'காப்பான்' டீசர் விமர்சனம்

Sunday, April 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்ட பல கெட்டப்புகளில் சூர்யா, ஆவேசமான பிரதமராக மோகன்லால், சூர்யாவை தீவிரவாதி என தவறாக கண்காணிக்கும் சாயிஷா, சாயிஷாவை காதலிக்கும் ஆர்யா என ஒவ்வொரு கேரக்டரையும் இயக்குனர் சரியாக கையாண்டுள்ளார் என தெரிகிறது. வழக்கம் போல் ஆக்சன் காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளார் சூர்யா.

ஹாரீஸ் ஜெயராஜின் அட்டகாசமான பின்னணி இசை, அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு குறிப்பாக வெளிநாட்டு காட்சிகள், அந்தோணியின் ஷார் படத்தொகுப்பு ஆகியவை படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்துள்ளது. அரசியல் வசனங்கள் ஷார்ப்பாக உள்ளது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

மேலும் இந்த டீசரில் ஒரு சர்ப்ரைஸாக இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் ஏற்கனவே ஊகித்தவாறு இந்த படம் ஆகஸ்ட் 15ல் வெளியாக வாய்ப்பு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.