நயன்தாராவின் அடுத்த பட படப்பிடிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Monday,November 30 2020]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் அவர் தற்போது ’நிழல்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நயன்தாரா நடித்துவரும் ’அண்ணாத்த’ படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது விஜய்சேதுபதியுடன் நயன்தாரா நடிக்க உள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கவுள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் டிசம்பர் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ச்சியாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை லலித்குமார் தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படம் அடுத்த வருடம் இறுதியில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

More News

கடன் தொல்லை, குடும்பமே தற்கொலை, அதிலும் ஒரு மனிதாபிமானம்: மதுரையில் அதிர்ச்சி 

மதுரை அருகே கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை செய்துகொண்ட நிலையில் மனிதாபிமானமாக வளர்ப்பு குழந்தையை மட்டும் தற்கொலை செய்யாமல்

தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை!

அஜித், விஜய் படங்களில் நடித்த நடிகை ஒருவர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது 

வயலில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த 110 விவசாயிகள் படுகொலை… பயங்கரவாதிகள் அட்டூழீயம்!!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் ஒரு பண்ணைத் தோட்டத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த 110 விவசாயிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியால் பாதிப்பா??? 5 கோடி நஷ்டஈடு கேட்ட சென்னை நபர்… சீரம் நிறுவனத்தின் பதில்!!!

ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் இரண்டும் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி நல்ல பலனைக் கொடுப்பதாக அதன் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

நாமினேஷனுக்கு பின் கேலி, கிண்டல் செய்யும் அர்ச்சனா குரூப்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஆரி, சனம், ரம்யா, ஷிவானி, ஆஜித் மற்றும் அனிதா ஆகிய 6 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. வழக்கம்போல அர்ச்சனா குரூப்பில் உள்ள அர்ச்சனா,