நயன், சமந்தாவுடன் கலர்ஃபுல் ஆட்டம்: 'காத்துவாக்குல ரெண்டு காதல்' வீடியோ!

நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் விஜய் சேதுபதி செம ஆட்டம் ஆடும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பாடல் வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்'. இந்த படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தில் இடம் பெற்ற ’டுடுடு’ என்ற பாடலின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. செம கலர்ஃபுல்லாக இருக்கும் இந்த வீடியோவில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் விஜய் சேதுபதி செம ஆட்டம் ஆடும் காட்சிகள் உள்ளன. இந்த காட்சிகளே படத்தை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தூண்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவனின் பாணியில் முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் காமெடியில் இந்த படம் கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சரத்குமாரின் கேரக்டர் இதுவா?  'தளபதி 66' படம் குறித்த ஒரு ஆச்சரிய தகவல்

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதும்

மாலத்தீவில் குடும்பத்துடன் நடிகை சமீரா ரெட்டி: வைரலாகும் பிகினி வீடியோ!

நடிகை சமீரா ரெட்டி குடும்பத்துடன் மாலத்தீவு சென்றுள்ள நிலையில் அவருடைய பிகினி வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

'காத்துவாக்குல ரெண்டு காதல்' செம அப்டேட்டை வெளியிட்ட சமந்தா!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துவரும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில்

'பீஸ்ட்' படத்திற்கு கண்டனம் தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்: என்ன காரணம்?

தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 'பீஸ்ட்' படத்திற்கு தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'பீஸ்ட்' படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி: நிஜமானது வடிவேலு காமெடி!

தியேட்டரில் விஜய்யின் 'பீஸ்ட்' படம் பார்க்கச் சென்ற ரசிகர்களுக்கு வடிவேல் காமெடி நிஜமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.