கஜா புயல் நிவாரண நிதிக்காக 'காற்றின் மொழி' படக்குழுவின் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,November 20 2018]

கஜா புயலின் சீற்றத்தால் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் சிதறியுள்ள நிலையில் அம்மாவட்டங்களில் வாழும் மக்களுக்காக திரையுலகினர் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் வெளியான 'காற்றின் மொழி' படக்குழுவும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன்படி இன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு 'காற்றின் மொழி' டிக்கெட் வருமானத்தின் தயாரிப்பாளர் ஷேரில் இருந்து ரூ.2 தமிழக அரசின் ;கஜா' புயல் நிவாரண நிதிக்கு வழங்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'காற்றின் மொழி' படக்குழுவின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்