close
Choose your channels

ஜோதிகாவின் 'காற்றின் மொழி' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Monday, September 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த ராதாமோகன் இயக்கிய 'காற்றின் மொழி' திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி வெளிவரும் என்ற வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

'காற்றின் மொழி' படத்தின் டீசர் வரும் வியாழன்று அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் வித்யாபாலன் நடித்த 'துமாரி சூளு' படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்திற்கு ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்த 'காற்றின் மொழி திரைப்படத்திற்கு ஏ.எச்.காசிப் இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் , ப்ரவீண் படத்தொகுப்புல் உருவாகியுள்ள இந்த படத்தை தனஞ்செயன் தயாரித்துள்ளார்,.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.