காதலர் தினத்தில் ஏ.ஆர்.ரஹ்மான். 'அழகியே' அடுத்து 'வான்'

  • IndiaGlitz, [Monday,February 06 2017]

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'காற்று வெளியிடை' படத்தின் 'அழகியே' சிங்கிள் பாடல் கடந்த 2ஆம் தேதி வெளிவந்து ஏ.ஆர்.ரஹ்மானின் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'வான்' என்று தொடங்கும் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் பிப்ரவரி 14ஆம் தேதி
'காதலர் தினத்தில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டருடன் கூடிய தகவல் தற்போது இணையதளத்தில் வெளிவந்துள்ளது. காதலர் தினத்தில் வெளிவருவதால் இந்த பாடல் பக்கா ரொமான்ஸ் பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி, அதிதிராவ் ஹைதி, ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை தமிழகம் முழுவதும் வரும் கோடை விடுமுறையில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

More News

தமிழகத்துக்குப் புது முதல்வர். ஓபிஎஸ் பதவி விலகல்

முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணமடைந்தபின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகப் போகிறார் என்றும்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வி;கே.சசிகலா தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

தீர்ப்பு எப்படி இருக்கும். கடைசி நிமிடத்தில் ஆச்சார்யா கருத்து

ஜெயலலிதா, சசிகலா உள்பட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று இந்த வழக்கில் கர்நாடக அரசு சார்பில் வாதாடிய ஆச்சார்யா கடைசி நிமிடத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்...

கமல்ஹாசனை அடுத்து நந்தினிக்காக குரல் கொடுத்த திரையுலக பிரமுகர்கள்

சமீபத்தில் அரியலூர் அருகே நந்தினி என்ற 17 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது...

விஷாலின் வேட்புமனு மீது தேர்தல் அதிகாரியின் அதிரடி நடவடிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார் என்பதை நேற்று பார்த்தோம். இவரது வேட்புமனுவை உலகநாயகன் கமல்ஹாசன் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...

பணத்தை விட சக்தி உள்ளது எது தெரியுமா? ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. இமயமலை உள்பட பல ஆன்மீக தலங்களுக்கு அவர் சென்று வழிபாடு நடத்தியுள்ளார். மேலும் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்....