பாலியல் குறித்து பேச ஏன் வெட்கபட வேண்டும்? 'கபாலி' நாயகி கேள்வி

  • IndiaGlitz, [Thursday,March 23 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' உள்பட ஒருசில தமிழ்ப்படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் 'பாலியல் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேச நமது நாட்டினர் வெட்கப்படுகின்றனர். மனித உடல் குறித்து பேசுவதற்கு ஏன் வெட்கப்பட வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் குறைந்த விலையில் நாப்கின் தயாரித்து சாதனை செய்த உண்மை சம்பவத்தை வைத்து பாலிவுட்டில் 'பாட்மேன்' (Pad Man) என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் ராதிகா ஆப்தே நடித்து வருகிறார்.

இந்த படம் குறித்து ராதிகா ஆப்தே அளித்த பேட்டியில், ' நமது தேசம் பாலியல், உடல் மற்றும் உடல் உறுப்புகள் சம்பந்தமாக எது இருந்தாலும் பேச வெட்கப்படுகிறது. மனித உடல் சம்பந்தமாக எது பேசினாலும் இங்கு பிரச்சினைதான்.

தலைமுறை தலைமுறையாக சில விஷயங்களை நாம் விசித்திரமாக அணுகி வருகிறோம். நான் இனி அப்படி நினைக்க மாட்டேன் என முடிவெடுத்தால் மட்டுமே மாற்றம் வரும். நாப்கின்களை எல்லார் முன்னாலும் கையில் வைத்து தொட்டுப்பார்ப்பது விசித்திரமாக இருக்கக் கூடாது. இது போன்ற சின்ன சின்ன விஷயங்களில் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது.

ஆண்கள் மட்டுமல்ல, பெண்களுக்குக் கூட இது போன்ற விஷயங்களை பேசுவதில் சிக்கல் இருக்கிறது. நமது வளர்ப்பும், சமுதாயமுமே இதற்குக் காரணம். அது மாறவேண்டிய நேரம் இது. பாட் மேன் போன்ற ஒரு படம் இந்த அளவில் பாலிவுட்டில் எடுக்கப்படுவது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி" இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

More News

ரஜினி ஆதரவு டுவீட்டுக்கு தமிழிசை செளந்திரராஜன் அதிரடி பதில்

ஆர்.கே.நகர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கங்கை அமரன், சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

ஒரே நேரத்தில் பதவி உயர்வு பெற்ற டி.ராஜேந்தர்-சிம்பு

பிரபல இயக்குனரும் லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தரும் அவருடைய மகனும் நடிகருமான சிம்புவும் ஒரே நேரத்தில் பதவியுயர்வு பெற்றுள்ளனர்.

தனுஷின் முதல் முயற்சிக்கு சிம்பு கூறிய வாழ்த்து

தனுஷ் இயக்கிய முதல்படமான 'பவர்பாண்டி' படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். ஓபிஎஸ்-சசிகலா அணியின் சின்னங்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரு அணிகளுக்கும் ஒன்றுபட்ட அதிமுகவின் சின்னமான இரட்டை இலை கிடையாது என்றும் அந்த சின்னம் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி

பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.