close
Choose your channels

'எந்திரனை' விட இருமடங்கு. 'கபாலி'யின் அசைக்க முடியாத சாதனை

Tuesday, July 26, 2016 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று  வெளியாகி மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. வார இறுதி நாட்களையும் கடந்து திங்கட்கிழமையும் திரையரங்குகளில் இந்த படத்திற்கு அதிக கூட்டம் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் வட அமெரிக்காவில் இந்த படத்தின் வசூல் புதிய சாதனையை செய்துள்ளது. இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பிரிமியர் மற்றும் நான்கு நாட்கள் வசூல் $3,896,444 என்பது தெரிய வந்துள்ளது. இந்த வசூல் இதே நான்கு நாட்கள் 'எந்திரன்' பட வசூலை விட இருமடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஒருசில இணையதளங்கள் மற்றும் சமூக இணையதள பயனாளிகள் எதிர்மறை விமர்சனங்கள் அளித்து வந்தபோதும் இந்த படத்தின் வசூல் குறையாமல் வெற்றிகரமாக ரூ.300 கோடி இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.