விஷாலின் அடுத்த படத்தில் 'வேதாளம்' வில்லன்!

  • IndiaGlitz, [Monday,August 05 2019]

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் 'வேதாளம்' பட வில்லன் கபீர் சிங் நடித்து வருவதாகவும், தற்போது அவருடைய கேரக்டர் குறித்த தகவல்களும் வெளிவந்துள்ளது

இந்த படத்தில் கபீர்சிங் ஒரு தீவிரவாதியாக நடித்து வருவதாகவும் அவருடைய கேரக்டர் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கபீர் சிங் பேட்டி ஒன்றில் கூறியபோது, 'இந்த படத்தின் கதையை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. சுந்தர் சி மற்றும் விஷால் படத்தில் இணைவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. எனக்கு இருவர் மீதும் எனக்கு நல்ல மரியாதை உள்ளது. அதேபோல் படப்பிடிப்பின்போது என்னையும் இருவரும் மரியாதையுடன் நடத்தினர். இந்த படத்தில் நான் ஒரு எதிரி நாட்டின் தீவிரவாதி வேடத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தில் என்னுடைய கேரக்டருக்கு தயாராக தீவிரவாதிகள் கதையம்சம் கொண்ட படங்கள் சிலவற்றை நான் பார்த்து என்னைத் தயார் செய்து கொண்டேன்.

அஜர்பைஜான், ராஜஸ்தான், துருக்கி உள்பட பல இடங்களில் ஏற்கனவே இந்த படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
 

More News

ரஜினி குறித்த சர்ச்சைக்குரிய காட்சி" 'கோமாளி' பட தயாரிப்பாளரின் அதிரடி முடிவு

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படத்தில் ரஜினிகாந்த் குறித்த சர்ச்சைக்குரிய காட்சி ஒன்று இருப்பதை அறிந்த ரஜினி ரசிகர்கள்

விஜய்சேதுபதியின் 'துக்ளக் தர்பாரில்' இணைந்த இளம் நடிகை!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அரசியல் த்ரில் திரைப்படமான 'துக்ளக் தர்பார்' என்ற திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று, படப்பிடிப்பும் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370வது சட்ட்ப்பிரிவு நீக்கம்: அமித்ஷா அரசாணை

ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார். 

அபிராமியால் டென்ஷன் ஆன முகின்: உடைந்த பிக்பாஸ் வீட்டின் பொருட்கள்

கடந்த வாரம் முழுவதும் கவின், சாக்சி, லாஸ்லியா முக்கோண காதல் அனைவருக்கும் திகட்டும் அளவுக்கு பிக்பாஸ் வீட்டில் ஓடிய நிலையில் இந்த வாரம் இந்த அலை சற்று ஓய்ந்துள்ளது.

சாக்சி வெளியேறாதது ஏன்? ரேஷ்மாவிடம் விளக்கிய கமல்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் கவின், லாஸ்லியா மட்டுமன்றி ஒட்டுமொத்த போட்டியாளர்கள் அனைவரையும் வெறுப்பேற்றிய சாக்சி கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியேறுவார்