close
Choose your channels

'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் கலக்கலான வசூல்

Monday, July 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடைக்குட்டி சிங்கம் படத்தின் கலக்கலான வசூல்

கார்த்தி, சாயிஷா, நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாராட்டுக்களை பெற்றது. குடும்ப செண்டிமெண்ட், காமெடி மற்றும் சமூக பிரச்சனைகளை அலசும் இந்த திரைப்படத்தை கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் கொண்டாடி வருகின்றன. நீண்ட நாளைக்கு பின்னர் குடும்பத்துடன் பார்க்கும் ஒரு திருப்தியான படம் என்றே ரசிகர்கள் கூறினர்

இந்த நிலையில் இந்த படம் சென்னையில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் 21 திரையரங்குகளில் 264 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,49,06,942 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் குவிந்திருந்தனர்.

இந்த படத்திற்கு கிடைத்துள்ள பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக இனிவரும் நாட்களிலும் இந்த படம் நல்ல வசூலை குவிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திற்கு பின்னர் கார்த்திக்கு மேலும் ஒரு வெற்றிப்படம் கிடைத்துள்ளது என்பது ஓப்பனிங் வசூலில் இருந்து தெரியவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.