close
Choose your channels

உலக அளவில் வசூலில் புதிய சாதனை படைத்த 'கடைக்குட்டி சிங்கம்'

Monday, July 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. இதுவரையிலான கார்த்தி படங்களில் இந்த படம்தான் அதிக வசூலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ.39.65 கோடி வசூல் பெற்றுள்ளது. சென்னையில் ரூ.4.51 கோடியும், கோவையில் ரூ.5.64 கோடியும், செங்கல்பட்டு பகுதியில் ரூ.8.3 கோடியும் இதுவரை வசூலாகியுள்ளது. மேலும் தொடர்ந்து மூன்றாவது வாரமாக இந்த படம் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சேர்த்து ரூ.62 கோடி வசூலாகியுள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் ரூ.30 கோடி என்ற நிலையில் இருமடங்கு வசூல் செய்து அனைத்து தரப்பினர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.