கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் புதிய அப்டேட்

  • IndiaGlitz, [Friday,June 08 2018]

கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக 'படைக்கிறவன் மட்டும் கடவுள் இல்லை ! பயிருடுறவனும் கடவுள்தான்' என்ற வசனம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் ஜூன் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பாடல்களிலும் கிராமிய மணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ், பானுப்ரியா, பொன்வண்ணன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யாவும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.