close
Choose your channels

விவசாயிகள் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி: வெற்றி விழாவில் அசத்திய 'கடைக்குட்டி சிங்கம்

Tuesday, July 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி, சாயிஷா நடிப்பில் சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. துணை ஜனாதிபதி உள்பட பலர் பாராட்டிய இந்த படத்தின் வசூலும் பிரமாதமாக உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிவிழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சூர்யா, கார்த்தி, சாயிஷா, ப்ரியாபவானி சங்கர், பாண்டிராஜ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். விவசாயம், விவசாயிகளின் பெருமைகளை படத்தில் கூறியது மட்டுமின்றி உண்மையாகவே இந்த வெற்றி விழாவில் விவசாயிகள் கவுரவிக்கப்பட்டது தான் இந்த விழாவின் மற்றொரு சிறப்பம்சம்

கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேருக்கு தலா 2 லட்சம் மற்றும் விவசாய மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி வழங்கி கவுரவிக்கப்பட்டது. விவசாய மேம்பாடு குறித்து வெறும் வசனத்தில் மட்டுமே பேசாமல் உண்மையாகவே விவசாயிகளை கவுரவித்த படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.