இந்த விருது மிகப்பெரிய ஊக்கம்.. 'கடைசி விவசாயி' இயக்குநர் ம. மணிகண்டன் நன்றி கடிதம் !

  • IndiaGlitz, [Friday,August 25 2023]

நேற்று 69 வது தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழில் வெளியான ’கடைசி விவசாயி’ என்ற திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. இதனை அடுத்து இந்த படத்தின் இயக்குனர் மணிகண்டன் தனது நன்றியை தெரிவித்துள்ளார். அவர் தனது நன்றி கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் அன்பான வணக்கம். மக்களாலும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட கடைசி விவசாயி திரைப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரமாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டிரைபல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “கடைசி விவசாயி” படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைக்க காரணமாக இருந்த விருது தேர்வு குழுவினருக்கும், இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும், மூத்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், இணையதள ஊடகங்களுக்கும் இந்நேரத்தில் என் சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைசி விவசாயி படத்தில், முதிய வயதிலும் சோர்வின்றி நடித்து, அக்கதாப்பாத்திரத்தை உயிர்ப்பித்து, கொண்டாட வைத்த மறைந்த அய்யா நல்லாண்டி அவர்களுக்கும், இப்படத்தினை உருவாக்க மிகபெரும் ஒத்துழைப்பை தந்த ஊர்மக்களுக்கும், இப்படத்தினை உலகம் முழுதும் கொண்டு சேர்த்த Vijaysethupathi Production மற்றும் 7cs Entertaiments நிறுவனங்களுக்கும், இந்தப் படத்தினை உருவாக்க உறுதுணையாகவும் இருந்து, சிறப்பாக நடித்தும் கொடுத்த மக்கள் செல்வன் திரு.விஜய் சேதுபதி அவர்களுக்கும், சக தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேசிய விருதுக்காக மனதார பாராட்டிய மக்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 69 வது தேசிய விருதுகளில், தமிழ் மொழிக்கு, கடைசி விவசாயி படம் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது மிகப்பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இது போல படைப்புகளை உருவாக்க, இந்த விருது மிகப்பெரிய ஊக்கம் தந்துள்ளது. மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

More News

தேசிய விருது பெற்ற ஒரே ஒருவருக்கு மட்டும் வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்..! என்ன காரணம்?

69 வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேசிய விருதுகள் பெற்ற ஒரே ஒருவருக்கு மட்டுமே உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் வாழ்த்து கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய திரைப்படத்திற்கு தேசிய விருதா? தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம்.!

 69 வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் தமிழில் எதிர்பார்த்த சில படங்கள் விருதுகள் கிடைக்காமல் இருந்தது தமிழக திரை உலகிற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

49 வருடத்தில் இதுதான் மோசமான அனுபவம்.. ஷங்கர், மணிரத்னம் பட ஒளிப்பதிவாளர் ஆதங்கம்..!

 தன்னுடைய 49 வருடத்தில் இதுதான் மோசமான அனுபவம் என சென்னை விமான நிலையத்தில் தனக்கு நிகழ்ந்தது குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் தெரிவித்துள்ளார்.  

சிறந்த படம், சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு.. தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமா?

69வது தேசிய விருது இன்று மாலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில்  தமிழ் படங்களுக்கு சில

லைகாவின் அடுத்த படம்.. பூஜை விழாவுக்கு வந்த முன்னாள் பிரதமர், முன்னாள் முதல்வர்..!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில், இந்த பூஜையில்  முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள்