'கடாரம் கொண்டான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,April 13 2019]

விக்ரம், அக்சராஹாசன் நடிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் 'கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

'கடாரம் கொண்டான்' திரைப்படம் வரும் மே மாதம் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டு, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதே தேதியில்தான் சூர்யாவின் 'என்.ஜி.கே. ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விக்ரம், அக்சராஹாசன், நாசர் மகன் அபி மெஹ்தி ஹாசன், '8 தோட்டாக்கள்' பட நாயகி மீராமிதுன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இந்த படத்தை தயாரித்துள்ளது.