போலீசுக்கு பயந்து கீழே இருந்த மாஸ்க்கை எடுத்து போட்ட இளைஞர்: குடும்பமே கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு

போலீசாரின் கெடுபிடி மற்றும் அபராதம் செலுத்துவதற்கு பயந்து கீழே கிடந்த மாஸ்க்கை எடுத்து முகத்தில் அணிந்த இளைஞரால் அவருக்கு மட்டுமின்றி அவரது குடும்பமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் காட்பாடி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரடங்கு நேரத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது ரோந்து வந்த போலீசார்கள் முகக்கவசம் இல்லாமல் வீதியில் செல்பவர்களை பிடித்து அபராதம் போட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் போலீசாரை பார்த்த அந்த இளைஞர் தானும் மாஸ்க் இல்லாமல் வந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே போலீசாரிடம் இருந்து தப்பிக்க அங்கு கீழே கிடந்த ஒரு மாஸ்க்கை எடுத்து அணிந்து உள்ளார். இதனை அடுத்து அந்த இளைஞர் போலீசாரிடம் இருந்து தப்பி வீட்டுக்கு சென்று உள்ளார்.

இந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா பரவியுள்ளது. அவருக்கு மட்டுமின்றி அவருடைய பெற்றோர், தம்பி தங்கை என மொத்தம் அவருடைய குடும்பத்தில் உள்ள ஐந்து பேருக்கும் கொரோனா தொற்று உள்ளதாகவும் இதனை அடுத்து அனைவரும் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

முகக்கவசம் இல்லாமல் சென்ற அந்த இளைஞர் போலீசாரிடம் சிக்கி இருந்தால் 100 ரூபாய் அபராதத்துடன் முடிந்திருக்கும். ஆனால் கீழே கிடந்த மாஸ்க்கை எடுத்து அணிந்ததால் தற்போது குடும்பமே கொரோனாவால் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்க் அணிவது என்பது நம்முடைய பாதுகாப்புக்குத்தான் என்றும் போலீசாருக்கு பயந்து அல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்து, மாஸ்க்கை அணிந்து வெளியே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

More News

பீட்டர்பால் முதல் மனைவி போலீஸ் புகார்: விவாகரத்து பெறாமல் 2வது திருமணமா?

நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் கோலிவுட் திரையுலகமே இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் பீட்டர் பாலுடன் புதிய வாழ்க்கை தொடங்க வனிதா

ஓடிடியில் அடுத்த தமிழ்ப்படம்: ஜூலை 10 ரிலீஸ் என அதிகாரபூர்வ அறிவிப்பு

கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பது குறித்த தகவலும் இல்லை. எனவே வேறு வழியின்றி ரிலீசுக்கு

ஜெயராஜ்-பென்னிக்ஸ் இறக்கவில்லை: பொய் கூறிய போலீஸ் அதிகாரியின் வீடியோ வைரல்

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் கடை திறந்து வைத்ததாக கூறி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் மரணம்: தஞ்சையில் பரபரப்பு

கொரோனா வைரசால் கடந்த சில நாட்களாக தினந்தோறும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் 50க்கும் அதிகமானோர் பலியாகி வருவதாகவும் உள்ள செய்திகளை

வன்முறையால்‌ ஒருபோதும்‌ மக்களின்‌ மனதை வெல்ல முடியாது: சாத்தான்குளம் விவகாரம் குறித்து சூர்யா அறிக்கை

சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் ஆகிய தந்தை-மகன், காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் மர்ம மரணம்