close
Choose your channels

கார்த்தியின் 'கைதி' சென்சார் தகவல்

Monday, October 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் படமான 'கைதி' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் அரிதாகவே ஹீரோயின், பாடல்கள், ரொமான்ஸ் இல்லாமல் திரைப்படங்கள் வெளிவருவதுண்டு. அந்த வகையில் 'கைதி' திரைப்படம் முழுக்க முழுக்க காட்சிகள் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த படம் தீபாவளி அன்று வெளியாகவிருப்பதை அடுத்து புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது. கைதி' திரைப்படத்தை இன்று பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யூஏ' சான்றிதழ் அளித்துவிட்டனர். இதனையடுத்து இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து விரைவில் சரியான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரீம் வாரியர் மூவீஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் கார்த்தியுடன் நரேன், தீனா, ஜார்ஜ் மரியான் உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.