close
Choose your channels

'கைதி' டைட்டிலில் கமலுக்கு கெளரவம் அளித்த இயக்குனர்!

Monday, October 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி தீபாவளி விருந்தாக தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கோலிவுட் பிரமுகர்கள் சிலர் இந்த படத்தை பார்த்து பாராட்டி உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் நாயகி, ரொமான்ஸ், பாடல்கள் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி இருப்பதால் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் ’கைதி’ திரைப்படத்தில் உள்ள ஒரு சில கேரக்டர்கள் கமல்ஹாசனின் ’விருமாண்டி’ மற்றும் ஹாலிவுட் திரைப்படமான ’டை ஹார்ட்’ ஆகிய படங்களின் பாதிப்பால் உருவாக்கப்பட்டது என்றும் இதனை அடுத்து இந்த படங்களுக்கும் டைட்டிலில் கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

விருமாண்டி, டை ஹார்ட் ஆகிய இரண்டு படங்களும் சிறைக்காட்சிகள் அதிகம் உள்ள படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.