close
Choose your channels

அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் இணைந்த 'கைதி' 'மாஸ்டர்' 'விக்ரம்' பட நடிகர்..!

Monday, June 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'கைதி’ ’மாஸ்டர்’ ’விக்ரம்’ ஆகிய மூன்று படங்களில் நடித்த நடிகர், அஜித்தின் ’விடாமுயற்சி’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’விடாமுயற்சி’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளுக்காக மகிழ்திருமேனி மற்றும் அஜித் ஆகிய இருவரும் லண்டன் சென்று இருப்பதாகவும் அங்கு போட்டோஷூட் நடைபெறுவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’விடாமுயற்சி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனிலும் அதனை அடுத்து புனேவில் நடத்த பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'கைதி’ ’மாஸ்டர்’ ’விக்ரம்’ ஆகிய படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் இணைந்து உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.