'கைதி' பட பிரபலத்தை 'தளபதி 67' படத்தில் இணைக்கும் லோகேஷ் கனகராஜ்!

விஜய் நடித்து முடித்துள்ள ’வாரிசு’ திரைப்படம் ஒருபக்கம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்கயிருக்கும் ’தளபதி 67’ படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த படத்தில் சஞ்சய்தத், நவீன் பாலி, கௌதம் மேனன், விஷால், த்ரிஷா உள்பட பல பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் ’கைதி’ படத்தில் பணிபுரிந்த பிரபலம் ஒருவரை லோகேஷ் கனகராஜ் அழைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’, தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ விக்ரம் நடித்த ’மகான்’ உள்பட பல படங்களுக்கு காஸ்ட்டியூம் டிசைனராக பணி புரிந்த பிரவீன் தற்போது ’தளபதி 67’ படத்திலும் பணிபுரிய இருப்பதாக கூறப்படுகிறது. இவர் விஜய்க்கு லுக் டெஸ்ட் விரைவில் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விஜய் தனது குடும்பத்துடன் துபாயில் ஓய்வு எடுத்து வரும் நிலையில் அவர் சென்னை திரும்பியதும் இந்த லுக் டெஸ்ட் பணிகள் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவில் விஜய்க்கு இந்த படத்தில் வித்தியாசமான லுக் இருக்கும் என்றும் இது ஒரு அதிரடி கேங்ஸ்டர் ஆக்ஷன் படம் என்பதால் அவரது லுக் மிகவும் பரபரப்பாக பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.

‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் அதன் பின்னர் ஒரு சில வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

குடும்பத்தோடு மதம் மாறிய தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்

குடும்பத்தோடு புத்த மதத்திற்கு தமிழ் நடிகர் ஒருவர் மாறியதன் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'நான் நட்சத்திரம் இல்லை: 'லவ் டுடே ' வெற்றி குறித்து பிரதீப் ரங்கநாதனின் நெகிழ்ச்சி பதிவு

'கோமாளி' பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ.25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும்

அட்வகேட்டையே அடிக்கிறான்னா இவன் டேஞ்சரான ஆள்தான்: 'பரோல்' டிரைலர்

அதிரடி ஆக்சன் திரைப்படமான 'பரோல்' என்ற படம் வரும் 11-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'வாரிசு' படத்துடன் கனெக்சன் ஆன 'லவ் டுடே': தயாரிப்பாளரின் மகிழ்ச்சியான ட்விட்!

'கோமாளி' பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய 'லவ் டுடே' திரைப்படம் விஜய் நடித்து வரும்  'வாரிசு' திரைப்படத்துடன் கனெக்ஷன் ஆன தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அஜித்தின் அடுத்த படத்தில் 'பிக்பாஸ் சீசன் 6' போட்டியாளர்: மாஸ் தகவல்

அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் தான் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியாளர் தெரிவித்துள்ளது பரபரப்பை