close
Choose your channels

ரூ.1000 கோடி வசூல் பட நாயகனுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்.. அசத்தல் தகவல்கள்..!

Sunday, May 18, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மாஸ் நடிகரின் படம் ஒன்று 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த நிலையில், அந்த நடிகருக்கு ஜோடியாக நடிக்க நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட திரையுலகின் பிரபல நடிகர் யாஷ் என்பதும், அவரது 'கேஜிஎப் 2' திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகி 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில், அவர் தற்போது 'டாக்சிக்' என்ற படத்திலும், 'ராமாயணம்' என்ற படத்திலும் நடித்து வரும் நிலையில், 'ராமாயணம்' படத்தில் அவர் ராவணன் கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ராமர் கேரக்டரில் ரன்பீர் கபூர், சீதையாக சாய்பல்லவி நடித்து வரும் நிலையில், இராவணன் கேரக்டரில் நடிக்கும் யாஷ் ஜோடியாக மண்டோதரி கேரக்டரில் காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன் அவருக்கு லூக் டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும், சில காட்சிகளிலும் அவர் நடித்து காட்டியதில் இயக்குனருக்கு திருப்தி ஏற்பட்டதை அடுத்து, அவர் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க அவருக்கு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

2026 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment