காஜல் அகர்வால் மகனுக்கு அதற்குள் இத்தனை வயதாகிவிட்டதா? பிறந்த நாளின் நெகிழ்ச்சி பதிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை காஜல் அகர்வால் தனது மகனின் மூன்றாவது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த நெகிழ்ச்சியான பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, "காஜல் அகர்வால் மகனுக்கு அதற்குள் மூன்று வயதாகி விட்டதா?" என ரசிகர்கள் கமெண்ட்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால் என்பதும், அஜித், விஜய், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி கௌதம் என்பவரை காஜல் அகர்வால் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, இந்த தம்பதிக்கு 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு 'நெய்ல்' என்று பெயர் வைத்தனர்.
இந்நிலையில், இன்று காஜல் அகர்வால் மகனின் மூன்றாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்த புகைப்படங்களை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் "இனிய மூன்றாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இவர் ஸ்நாக்ஸ் இல்லாமல் இருக்கவே மாட்டார். இரவில் லேசில் தூங்க மாட்டார். உலகத்திலேயே ப்ரோக்கோலியை வெறுப்பவர் இவர் ஒருவராக இருப்பார். ஆனால் சேற்றை சாப்பிடுவதில் இவருக்கு ரொம்ப விருப்பம்.
நீ எங்கள் கண்களின் முத்து, எங்கள் சிறிய சூறாவளி, எங்கள் உள்ளத்தின் சிரிப்பு, எங்கள் உற்சாகத்திற்கு நீயே காரணம். நீ எங்கள் வாழ்க்கையை சிரிப்பால், நெஞ்சை உருக்கும் நிமிடங்களால் ஒளிர வைத்துள்ளாய். நானும் உன் அப்பாவும் உன்னை அதிகமாக நேசிக்கிறோம்" என்றும் பதிவு செய்துள்ளார்.
மேலும், கணவருடன் குழந்தை இருக்கும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்த நிலையில், இந்த க்யூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com