close
Choose your channels

'இந்தியன் 2' படத்தில் இருந்து விலகினேனா? காஜல் அகர்வால் கூறிய ஆச்சரிய தகவல்!

Friday, August 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு பயிற்சிக்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்று இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடித்து வந்த காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்து விட்டதால் அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக இந்த படத்தில் நடிக்க தீபிகா படுகோன் உடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த காஜல்அகர்வால், ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து தான் விலகவில்லை என்றும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் தான் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து ’இந்தியன் 2’ படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகியதாக வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.