close
Choose your channels

 காஜல் அகர்வால் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டது: பிரபல இயக்குனர் அதிர்ச்சிதகவல்

Monday, April 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை காஜல் அகர்வால் நடித்த காட்சிகள் அனைத்தும் படத்தில் இருந்து நீக்கப்பட்டது என பிரபல இயக்குநர் உறுதி செய்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

தெலுங்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் தேஜா இணைந்து நடித்த திரைப்படம் ‘ஆச்சாரியா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 29ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்ற போது இந்த படத்தில் நடித்த காஜல் அகர்வாலின் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டது என்றும் படத்தில் அவருடைய காட்சிகள் இல்லை என்றும் இயக்குனர் கொரட்டலா சிவா கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆச்சாரியா’ படத்தின் படப்பிடிப்பின்போது காஜல் அகர்வால் திருமணமாகி கர்ப்பம் ஆகி விட்டதாகவும் இதனை அடுத்து இந்த படத்தில் அவருடைய காட்சிகளை நீக்க சிரஞ்சீவி இடம்தான் சம்மதம் கேட்டதாகவும், அவர் ஒப்புக் கொண்டதை அடுத்து அவருடைய காட்சிகள் நீக்கப்பட்டதாக இயக்குனர் கூறியுள்ளார் .

இதனை அடுத்து சிரஞ்சீவிக்கு இந்த படத்தில் ஜோடியில்லை என்றும், ராம்சரண் தேஜாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.