close
Choose your channels

கையில் குழந்தை, கணவருக்கு முத்தம்: காஜல் அகர்வால் வீட்டில் என்ன விசேஷம்?

Tuesday, August 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு கையில் குழந்தை இன்னொரு பக்கம் கணவருக்கும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை காஜல் அகர்வால் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால் என்பதும் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே. இந்த தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது என்பதும் இந்த குழந்தைக்கு நீல் என்று பெயர் வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது குழந்தை மற்றும் கணவருடன் கூடிய புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன்னர் அவர் தனது கணவருக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே ஒரு கையில் குழந்தையை இருவரும் கையில் ஏந்தி இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

காஜல் அகர்வாலின் கணவர் கௌதம் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்தே இந்த முத்தத்தை அவர் பரிசாக அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் பதிவு செய்து ஒருசில நிமிடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுமார் 2 லட்சம் லைக்ஸ் குவிந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காஜல் அகர்வால் ‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்காக சென்னை வந்துள்ளார் என்பதும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.