close
Choose your channels

அந்த புக் எழுதி 100 வருஷம் இருக்கும் .. காஜல் அகர்வாலின் 'கருங்காப்பியம்' டிரைலர்

Tuesday, January 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காஜல் அகர்வால், ரெஜினா மற்றும் ஜனனி ஐயர் ஆகிய மூன்று நடிகைகள் முக்கிய கேரக்டரில் நடித்த ’கருங்காப்பியம்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் மீண்டும் திரில் கதை அம்சம் கொண்ட பேய் படங்கள் வர தொடங்கிவிட்டன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள ’கருங்காப்பியம்’ என்ற திரைப்படமும் அமானுஷ்ய சக்தியை கொண்ட கதை அம்சம் கொண்டது என்பது இரண்டு நிமிட ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

காஜல் அகர்வால், ரெஜினா மற்றும் ஜனனி ஐயர் ஆகிய மூன்று நடிகைகள் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஆதவ் கண்ணதாசன், கலையரசன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். பிரசாத் இசையில், விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில், விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தை கார்த்திகேயன் என்பவர் இயக்கி உள்ளார்.

முழுக்க முழுக்க திரில் காட்சிகள் கொண்ட இந்த ட்ரைலர் தற்போது வைரல் ஆகி வருகிறது. ’கருங்காப்பியம்’ என்ற புத்தகத்தில் அடுத்து வரும் 100 வருடத்தை கணித்து எழுதி உள்ள நிலையில் அதில் குறிப்பிட்டபடி நடக்கிறதா? என்பது தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.