அந்த புக் எழுதி 100 வருஷம் இருக்கும் .. காஜல் அகர்வாலின் 'கருங்காப்பியம்' டிரைலர்

  • IndiaGlitz, [Tuesday,January 31 2023]

காஜல் அகர்வால், ரெஜினா மற்றும் ஜனனி ஐயர் ஆகிய மூன்று நடிகைகள் முக்கிய கேரக்டரில் நடித்த ’கருங்காப்பியம்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் மீண்டும் திரில் கதை அம்சம் கொண்ட பேய் படங்கள் வர தொடங்கிவிட்டன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள ’கருங்காப்பியம்’ என்ற திரைப்படமும் அமானுஷ்ய சக்தியை கொண்ட கதை அம்சம் கொண்டது என்பது இரண்டு நிமிட ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

காஜல் அகர்வால், ரெஜினா மற்றும் ஜனனி ஐயர் ஆகிய மூன்று நடிகைகள் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஆதவ் கண்ணதாசன், கலையரசன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். பிரசாத் இசையில், விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில், விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தை கார்த்திகேயன் என்பவர் இயக்கி உள்ளார்.

முழுக்க முழுக்க திரில் காட்சிகள் கொண்ட இந்த ட்ரைலர் தற்போது வைரல் ஆகி வருகிறது. ’கருங்காப்பியம்’ என்ற புத்தகத்தில் அடுத்து வரும் 100 வருடத்தை கணித்து எழுதி உள்ள நிலையில் அதில் குறிப்பிட்டபடி நடக்கிறதா? என்பது தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

நயன்தாராவை முந்திய ஹன்சிகா.. பிப்ரவரி 10ஆம் தேதி ரிலீஸ்!

நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அவருடைய திருமணம் நடந்து கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் அந்த வீடியோ

திருப்பதி கோவிலில் மகனுக்கு ஆசி பெற்ற தமிழ் நடிகை.. புகைப்படம் வைரல்!

தமிழ் திரையுலகில் அஜித், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை தனது மகனுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆசி பெற்ற புகைப்படம், வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

மருத்துவமனையில் விஜய் பட நடிகை.. குளுக்கோஸ் ஏற்றும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் படத்தில் நாயகியாக நடித்த நடிகை தனக்கு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ஏன் அவன் பொண்டாட்டி அவனை விட்டு போயிட்டா?  அசீம் ரசிகர்களின் கிண்டலுக்கு பதிலடி கொடுத்த நடிகை!

இதனால தான் உன் புருஷன் உன்னை விட்டு போயிட்டானா? என பிக்பாஸ் அசீம் ரசிகர்கள் நடிகை ஒருவரை தரக்குறைவாக விமர்சனம் செய்த நிலையில் அசீம் பொண்டாட்டி எதனால் அவனை விட்டு போயிட்டா?

அஞ்சலியின் 'ஜான்சி' இணையத்தொடர்: இரண்டாவது சீசன் வெளியீடு

Tribal Horse Entertainment சார்பில்  நடிகர் கிருஷ்ணா வழங்கும்,  இயக்குநர் திரு இயக்கத்தில், நடிகை அஞ்சலி நடித்திருந்த “ஜான்சி”  தொடர் முதல் சீசன் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு