டாப்சியை அடுத்து தமன்னாவுக்கு உதவிய காஜல் அகர்வால்

  • IndiaGlitz, [Friday,July 19 2019]

பிரபல நடிகை தமன்னா நடிக்கவுள்ள அடுத்த த்ரில் படம் ஒன்றின் டைட்டில் லுக் போஸ்டரை நேற்று நடிகை டாப்சி வெளியிட்டார் என்பது தெரிந்ததே

'பெட்ரோமாக்ஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ரோஹின் வெங்கடேசன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'அதே கண்கள்' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். இதனையடுத்து காஜல் அகர்வாலுக்க்கு தமன்னா நன்றி தெரிவித்துள்ளார்.

தமன்னா, யோகிபாபு, காளிவெங்கட், டிஎஸ்கே,பிரேம் குமார் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். டேனி ரெய்மண்ட் ஒளிப்பதிவில் லியோ ஜான்பால் படத்தொகுப்பில் உருவாகும் இந்தப் படத்தை ஈகிள்ஸ் ஐ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது
 

More News

மணிரத்னம் படத்தில் இணைந்த சாந்தனு பாக்யராஜ்

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அவர் தற்போது 'வானம் கொட்டட்டும்'

பால்கனியில் பாலுறவு: 9வது மாடியில் இருந்து நிர்வாணமாக கீழே விழுந்த ஜோடி

ரஷ்ய நாட்டிலுள்ள ஒரு அப்பார்ட்மெண்டின் 9வது மாடியில் ஒரு பெண்ணும் ஒரு சில ஆண்களும்  பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்தனர்.

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ'வில் இணைந்த பாலிவுட் வில்லன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புதிரை' இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஹீரோ'. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்,

என்னால ஹேண்டில் பண்ண முடியலை: சாரி சொன்ன கவின்

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக முக்கோண காதலில் சிக்கி தவிக்கும் கவின், லாஸ்லியா, சாக்சி இருவரையும் எப்படி சமாதானப்படுத்துவது

ஒருத்தரோட ஃபீலிங்ஸோட விளையாடறடு பெரிய தப்பு: கவினுக்கு சாட்டையடி தந்த லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் கவினின் காதல் நாடகம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. ஒரே நேரத்தில் நான்கு பெண்களிடம் ஜாலியாக பழகி பிளேபாய் போல் வலம் வந்து கொண்டிருந்த கவின்,