முதல் வருட திருமண நாள்: காஜல் அகர்வாலின் க்யூட் இன்ஸ்டாகிராம் பதிவு!

  • IndiaGlitz, [Sunday,October 31 2021]

பிரபல நடிகை காஜல் அகர்வால் திருமணமாகி ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து தனது கணவருக்கு க்யூட்டான இன்ஸ்டாகிராம் மெசேஜ் ஒன்றை பதிவு செய்திருப்பது வைரலாகி வருகிறது.

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் மிக எளிமையாக திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் நடந்து நேற்றுடன் ஒரு வருடம் நிறைவு பெற்றதை அடுத்து காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டான ரொமான்ஸ் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் ’நடுராத்திரி எழுந்து விழித்து இருக்கின்றீர்களா? இந்த நாய்க்குட்டி வீடியோவை பாருங்கள் என உங்கள் காதில் கிசுகிசுக்கும் போது உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன். நமக்கு நடந்த இந்த திருமணத்துக்கு ஒரு ஆண்டு நிறைவடைந்தது’ என்று கூறியுள்ளார். இத்துடன் ரொமான்ஸ் புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படமும் அவருடைய பதிவும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை காஜல் அகர்வால் தற்போது ’ஹே சினாமிகா’, ‘கருங்கல்பாளையம்’, ‘ கோஸ்ட்டி’ ‘இந்தியன் 2’ மற்றும் ’பாரிஸ் பாரிஸ்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

படையப்பா எழுந்து வா.. பாட்ஷாபோல் நடந்து வா: ரஜினியை வாழ்த்திய பிரபலம்!

படையப்பா எழுந்து வா, பாட்ஷா போல் நடந்து வா என ரஜினியின் நெருங்கிய நண்பர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து கவிதை எழுதி உள்ளது வைரலாகி வருகிறது

பிரியங்காவுக்கு எலிமினேஷன் ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இந்த வாரம் 9 பேர் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் இசைவாணி மற்றும் இமான் அண்ணாச்சி நேற்று காப்பாற்றப்பட்டனர் என்பதும் அது போக மீதி ஏழு பேர்களில் ஒருவர்

எழில் கொஞ்சும் வனப்புடன் நடிகை ரித்து வர்மா… அட்டகாசமான புகைப்படம்!

தெலுங்கு சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவருபவர் நடிகை ரித்து சர்மா. இவர் கௌதமன் மேனன் இயக்கத்தில்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியவர் இவரா?

இந்த வாரம் சின்னப்பொண்ணு, அக்சரா, பாவனி, ஸ்ருதி, இசைவாணி, அபினய், இமான், வருண், பிரியங்கா ஆகிய ஒன்பது பேர்கள் நாமினேஷன் செய்யப்பட்டனர் என்பதும் அவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சிஎஸ்கே வீரரின் தங்கை… வைரல் தகவல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்துவரும் தீபக் சாஹரின் தங்கை மால்தி சாஹர் தற்போது நயன்தாரா-